60 அடி உயரத்தில் உள்ள மரத்தில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த விவசாயியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டார்கள்.
தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் சோலையூர் என்று அழைக்கப்படும் மலைக்கிராமத்தில் வாழ்ந்து வருபவர் நாகையா. விவசாயியான நாகையா நேற்று முன்தினம் காலையில் தோட்டத்தில் உள்ள இலவ மரத்தின் மீது ஏறி இலவம் காய்களை பறித்துக் கொண்டிருந்தார். அந்த மரமானது 60 அடி உயரம் உள்ளது. ஏறிய அவரால் மீண்டும் கீழே இறங்கி வர முடியாததால் கூக்குரலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அங்கிருந்த அக்கம்பக்கத்தினர்கள் வந்து அவரை மீட்க பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களால் மீட்க முடியாததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். இதனால் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி நாகையாவை பத்திரமாக மீட்டார்கள்.