அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொலராடோ என்ற நாட்டில் கெட் லெஸ் சிக்கன் என்ற விழா ஒவ்வொரு வருடமும் ஜூன் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு முக்கிய காரணம் மைக் என்ற கோழி. அதிசய மைக் என்று பெயரிடப்பட்ட இந்த கோழி தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்ததாம்.
ஒருநாள் அந்தக் கோழியின் உரிமையாளர் சமைப்பதற்காக அதன் தலையை வெட்டியுள்ளார். ஆனால் தலை துண்டிக்கப்பட்ட பிறகும் அந்த கோழி உயிருடன் இருந்துள்ளது. இதனைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். கோழியின் மூளையின் முக்கிய பகுதி பாதிக்கப் படாமல் இருந்ததால் கோழி உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அந்த கோழிக்கு சிறிய குழாய் மூலமாக உணவு கொடுக்கப்பட்டு வந்தது. உணவுக்குழாயில் உணவு சிக்காமல் இருக்க நீரானது சிரஞ்சி மூலம் கொடுக்கப்பட்டது. அதன் மூலமாக 18 மாதங்கள் அந்தக் கோழி உயிருடன் வாழ்ந்து உள்ளது. இந்தச் செய்தி உலகம் முழுவதும் பரவியது. அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகு உணவு குழலில் உணவு சிக்கி அந்தக் கோழி உயிரிழந்தது. அந்தக் கோழியை நினைவு கூறும் வகையில் கெட் லெஸ் சிக்கன் விழா கொண்டாடப்பட்டு வருகிறதாம்.