ரயிலில் பயணம் செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரயில்களில் படுக்கை மற்றும் போர்வை வழங்கும் சேவைகளை இந்திய ரயில்வே மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியது. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் முக்கிய பகுதியாக ரயில்களில் படுக்கைகள் மற்றும் போர்வைகள் வழங்கும் சேவை நிறுத்தப்பட்டது. அதனால் நீண்ட தூரம் ரயில் பயணம் மேற்கொள்வோர் அவதிப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ரயில்களில் படுக்கை மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சேவை கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. அதன்படி ரயில்களில் ஏசி பெட்டிகளில் தலையணை, போர்வை, படுக்கை, பெட்ஷீட் மற்றும் துண்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு வழித்தடங்களில் செல்லும் ரயில்களில்,முக்கியமாக நெடுந் தூரம் பயணிக்கும் ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வழங்கும் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது. அதனால் ரயில் பயணிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.