Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வகுப்புக்கு சிறிது நேரம் கழித்து வருகிறேன்” தோழிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள வானுவம்பேட்டை பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் விடுதியில் தங்கி தனியார் மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சக மாணவிகள் நந்தினியிடம் வகுப்புக்கு செல்லலாம் என அழைத்துள்ளனர். அப்போது தான் சிறிது நேரம் கழித்து வருவதாக நந்தினி கூறியுள்ளார்.

இதனையடுத்து காலை 10 மணிக்கு நந்தினியின் தோழிகள் அவரை அழைப்பதற்காக விடுதிக்கு வந்து நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளனர். ஆனாலும் அறையின் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது நந்தினி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த தோழிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நந்தினியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நந்தினி அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கத்தியை வைத்து முதலில் கை மணிக்கட்டை வெட்டியுள்ளார். அதன்பிறகு ரத்தம் வடிந்த நிலையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. காலை 7.30 மணி அளவில் நந்தினி அவரது தாயாரிடம் செல்போனில் பேசியுள்ளார். எனவே நந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |