Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெற்ற மகள் என்றும் பாராமல்…. தந்தையே செய்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சொந்த மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தாய் வெளியே செல்லும் நேரத்தில் சிறுமியின் தந்தை சொந்த மகள் என்றும் பாராமல் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த சிறுமி உடனடியாக இதுகுறித்து தாயிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று இதற்கான இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது சொந்த மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தார்.

Categories

Tech |