Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தொடரும் உருவக் கேலியால் வேதனை”… பதிலடி தந்த மஞ்சிமா மோகன்…!!!!

தொடர்ந்து உருவ கேலி செய்து வந்ததால் வேதனை அடைந்த மஞ்சிமா மோகன் இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமா உலகில் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இவர் தற்போது தமிழ், மலையாளம் என இரண்டிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சென்ற சில மாதங்களாக உடல் எடை கூடியதால் உருவ கேலி செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் உருவ கேலிக்கு எதிராக பதிவு ஒன்றை வெளியிட்டு இருப்பது வைரலாகி வருகிறது.

அவர் கூறியுள்ளதாவது, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். ஆனால் அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. சிலருக்கு இது இயற்கையானது. சிலருக்கு வேறு சில பிரச்சனைகளால் கடினமாக இருக்கும். உருவ கேலி செய்வதை நிறுத்துங்கள். ஒருவரைக் கேலி செய்வதன் மூலம் அவர்களுடைய உடல் எடை குறைவது இல்லை. நீங்கள் அவர்களின் நம்பிக்கையை சிதைக்கிரீர்கள்.

ஒவ்வொரு நாளும் ஒரு வகை வலியை எதிர்கொள்பவர்களுக்கு நீங்கள் என்றும் அனைத்தையும் அரவணைத்த ஆரோக்கியமாக இருங்கள். அண்மையில் எனக்கு வந்த சில மெசேஜுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். யாரையும் துன்புறுத்த நான் இங்கே விரும்பவில்லை என்பதால் அவர்களின் இன்ஸ்டாகிராம் பெயர்களை நான் வெளியிட மாட்டேன் என்று தெரிவித்திருக்கின்றார். தீவிரமாக நீங்கள் கொஞ்சம் எடையை குறைக்க வேண்டும்,  பாவம் அந்த பையன், குண்டம்மா, ரொம்ப குண்டா இருக்கான் என கமெண்ட்டுகளை பதிவுவிட்டுயிருக்கின்றார்.

Categories

Tech |