Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. ஆன்லைன் மூலம் பண மோசடி…..களத்தில் இறங்கி கலக்கிய சைபர் கிரைம் போலீசார்….!!!!

திருச்சியில் ஆன்லைன் பணமோசடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி, அமுல்நகரை சேர்ந்தவர் சதீஷ். இவா் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வந்த நகை விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.80,000-க்கு நகையை  ஆர்டர் செய்து, அந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பொருள் வந்து சேரவில்லை. இதையடுத்து, திருச்சி தென்னூர் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த நேஷா என்பவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து நகை வாங்குவதற்காக ரூ.3,000 பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அவர்க்கும் பொருள் வந்து சேரவில்லை.

அதே போல் திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகாநகரை சேர்ந்த ராகவேந்தர் என்பவரும், ஆன்லைன் மூலமாக அலைபேசியை ரூ.58,049-க்கு ஆர்டர் செய்து, அதன் பின் ரத்து செய்து விட்டதாகவும், ஆனால் கம்பெனி விதிமுறைப்படி தனக்கு முழுத்தொகை வரவேண்டும் என்றும் ஆனால் வெறும் ரூ.1000- மட்டுமே திரும்ப கிடைத்ததாகவும், மீதிபணம் ரூ.57,049 வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் தாங்கள் ஏமாந்தது தெரியாராவே அவர்கள் தங்கள்து பணத்தை மீட்டுத்தரக்கோரியும் ஆன்லைன் மூலமாக புகார் கொடுத்தனர்.இந்த மனுக்களை திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயன் உத்தரவுப்படி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முறைகேடாக நடைபெற்ற பண பரிவர்த்தனை பற்றி விசாரணை நடத்தினார். மேற்படி ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் புகார்தாரருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,41,000 திரும்ப சேர்க்கப்பட்டது.

மேலும் இது போன்று ஆன்லைன் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஆன்லைனில் வரும் போலி விளம்பரங்களை நம்பி, தங்களின் வங்கி கணக்கை யாரிடமும் பகிர்ந்து ஏமாற வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும்  யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்துவிட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்- 1930 என்ற தொலைபேசி எண்ணை விரைவாக தொடர்பு கொள்ளுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

Categories

Tech |