ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குவதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது. அதனை வாங்குபவர்களுக்கு என்று ஒரு பெருமை, கெத்து எல்லாம் இருக்கத்தான் வேண்டும். நம்முடைய இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 13 கோடி ரூபாய் கொடுத்து ரோல்ஸ் ராயஸ் cullinan என்ற மாடலை இந்திய பணக்காரர்களில் ஒருவரான அம்பானி வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த காருடைய நம்பர் ஃபேன்சி நம்பரான 001 ஆகும். இதற்காக மட்டுமே சுமார் 12 லட்ச ரூபாயை அம்பானி செலவு செய்திருக்கிறாராம்.
எந்த ஒரு பொருளையும் வெளிநாடுகளிலிருந்து நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது அதற்கென்று ஒரு வரிப் பணம் செலுத்த வேண்டியது அவசியம். அப்படியிருக்கையில் ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரி இருப்பதை கேட்கவா வேண்டும். சுமார் 20 லட்ச ரூபாயை மட்டும் one time tax ஆக அம்பானி செலுத்தியிருக்கிறார். இதுதான் இந்த காரினுடைய அதிகபட்ச விலையா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுமார் 28 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 202 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கார் என்று கூறப்படுகிறது.