Categories
உலகசெய்திகள்

வாவ்….! “ஊருனா இப்படி தா இருக்கணும்”….. வியக்க வைத்த சவூதி அரேபியாவின் சூப்பர் திட்டம்….!!!!

சவுதி அரேபியா இந்த நாடு இரண்டு விஷயங்களுக்கு பெயர் போனது. ஒன்று எண்ணெய் வள பொருளாதாரம், மற்றொன்று அங்கு நிலவும் மதரீதியிலான கட்டுப்பாடுகள். இவை இரண்டும் தற்போது பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. முதன்முதலாக 1938 ஆம் ஆண்டு சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முதல் அதிக அளவில் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவுதி காணப்பட்டது. தீவிரமாக வேரூன்றி தொடங்கிய வஹாபிய கோட்பாடு சமூக ரீதியாக பெரும்இறுக்கத்துக்குள் ஆழ்த்தியது. பெண்கள் பர்தா அணியாமல் வெளியில் வரமுடியாது. கார் ஓட்டுவதற்கு அங்கு அனுமதி கிடையாது. பெண்கள் தங்கள் உறவினர்கள் அல்லாத பிற ஆண்களுடன் வெளியில் செல்லக்கூடாது. குடும்பத்திலுள்ள ஆணிடம் அனுமதி வாங்காமல் பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல முடியாது.

கடைகளிலும் கூட ஆண்கள் பெண்கள் என்று தனித்தனி பிரிவு உள்ளது. இப்படி பல கட்டுப்பாடுகள் அங்கு இருந்தது. ஆனால் தற்போது கடந்த மூன்று ஆண்டு காலமாக சவுதி அரேபியா மாறிவருகிறது. ஆண்கள் துணையின்றி பெண்கள் விடுதியில் தங்கலாம். ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லலாம். பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதேபோல் தற்போது உள்கட்டமைப்பு வளர்ச்சியிலும் சவுதி நாடு முன்னேறி வருகின்றது. 2017 ஆம் ஆண்டு முகமது பின் சல்மான் அறிவித்த ஒரு திட்டமானது இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஏனென்றால் சவுதி அரேபியாவில் 170 கிலோ மீட்டருக்கு ஒரே நேர்கோட்டில் நியூமர் என்ற புதிய ஊரையே உருவாக்க போகிறார்கள் என்று தெரிவித்தனர். இதனை மூன்று பிரிவுகளாக பிரித்து கட்ட உள்ளனர். இதில் முதல் பிரிவில் கட்டிடங்கள், பூங்காக்கள், நடை பயிற்சி செய்வதற்கான இடங்கள் போன்றவை மட்டும் இருக்கும். அதைத் தொடர்ந்து இரண்டாவது பிரிவில் வாகனங்கள் செல்வதற்கான மெயின் ரோடு இருக்கும். இதில் கடைகள், வணிக வளாகங்கள், போன்ற மக்கள் ஷாப்பிங் செய்வதற்கு ஏதுவான பல கடைகள் இருக்கும். மூன்றாவதாக இந்த உலகிலேயே மிக அதி வேகமாக செல்லக்கூடிய ரயில்களை விடப் போகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த ஊரில் உள்ள அனைத்து டெக்னாலஜிகளையும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அதாவது ரோபோட்கள் மூலமாக செயல்படுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

முதல் பிரிவில் ஏன் எந்த ரோடுகளும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் வீடுகள் அனைத்தும் எந்த ஒரு இரைச்சலும், மாசுபாடும் இல்லாமல் மக்கள் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா நாடு இந்த ஒரு திட்டத்திற்கு 500 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 37 கோடி ரூபாய். இந்த ப்ராஜெக்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இது முழுமையாக வடிவமைக்கப்பட்ட பிறகு இந்த உலகிலேயே மிகவும்  மார்டன் மற்றும் ஸ்மார்ட் சிட்டி என்கின்ற பெயரையும் இந்த நாடு பெரும் என தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |