தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் களிமேட்டில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில், தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மின்சாரம் தாக்கி 11பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்..
அதேபோல உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்..
ஏற்கனவே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the mishap in Thanjavur, Tamil Nadu. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 27, 2022
Deeply pained by the mishap in Thanjavur, Tamil Nadu. My thoughts are with the bereaved families in this hour of grief. I hope those injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 27, 2022