Categories
பல்சுவை

“EMU WAR” கோழிகளிடம் தோற்று போன ஒரு நாட்டின் ராணுவம்….!!

ஆஸ்திரேலியாவில் 1932-ஆம் ஆண்டு கிரேட் ஈமு வார் நடைபெற்றது. இது ஈமு கோழிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற போராகும். முதலாம் உலகப் போருக்குப் பிறகு போரில் வேலை பார்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலங்களில் விவசாயிகள் தங்களது கோதுமை பயிர்களை வளர்க்க தொடங்கினர். 1932-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோதுமை பயிர்களின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. அதே நேரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த கோதுமை பயிர்களை 20 ஆயிரம் ஈமு கோழிகள் தின்று நாசப்படுத்தியது. இதனால் விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைந்தனர். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பியர்ஸிடம் முன்னாள் ராணுவ வீரர்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதன் விளைவாக ராயல் ஆஸ்திரேலிய பீரங்கியின் ஏழாவது பேட்டரி மேஜர் GPW மெரிடித்தின் கட்டளையின் படி போர் தொடங்கப்பட்டது. அப்போது நான்கு வீரர்கள் பயங்கர ஆயுதத்தை வைத்துக்கொண்டு ஈமு கோழிகளை சுட முயற்சித்தனர். ஆனால் ஈமு கோழிகளை சுலபமாக சுட முடியவில்லை. இதனையடுத்து நீண்ட சிரமத்திற்கு பிறகு 2500 தோட்டாக்களை பயன்படுத்தி 986 ஈமுக்கள் கொல்லப்பட்டது. இந்த போரில் அதிகாரப்பூர்வமாக ஈமு கோழிகள் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏனெனில் 20 ஆயிரம் ஈமுக்களில் 986 கோழிகளை மட்டுமே கொல்ல முடிந்தது. அப்போதைய காலகட்டத்தில் இந்த போர் குறித்து பாதுகாவலர்கள் தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர்.

Categories

Tech |