Categories
தேசிய செய்திகள்

தேர் விபத்தில் 11 பேர் பலி…. வார்த்தைகளால் சொல்ல முடியாத பெரும் சோகம்…. குடியரசுத் தலைவர் இரங்கல்..!!

தஞ்சை தேர் திருவிழா விபத்தில் இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்..

தஞ்சாவூர் களிமேட்டில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்..

இந்த நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில், தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினருக்கு  இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மின்சாரம் தாக்கி 11பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்..

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தஞ்சையில் தேர் திருவிழாவின் போது சிறுவர்கள் உட்பட பல பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது வார்த்தைகளால் சொல்ல முடியாத பெரும் சோகம். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |