Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. அரசு வெளியிட்ட தகவல்…. குஷியில் இளைஞர்கள்…..!!!!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 18- 24ம் தேதி வரை நடந்தது. கடந்த 18ஆம் தேதி 2022-2023ம் வருடத்துக்கான பட்ஜெட் தொடர்பான அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்தார். இதையடுத்து முதற்கட்ட பட்ஜெட் விவாதம் கடந்த மாதம் நடந்தது. அதன்பின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கிடையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இன்று தொழிலாளர்நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மீதான விவாதம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கிவிட்டது. இதன் காரணமாக பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்து உள்ளனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அத்துடன் பல இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோர் வேலைகளை பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பேரவையில் இது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியிருப்பதாவது, “இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் சுமார் 1 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு, தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்” என்று தகவல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

Categories

Tech |