ரஷ்யாவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் 5 பேர் தொடர்ந்து மரணமடைந்த சம்பவத்தில் அதிபர் விளாடிமிர் புடினுக்கு தொடர்பு உள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிற்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடனும் இருவர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடனும் இறந்து கிடந்தனர்.
இவர்களின் மரணத்தில் மர்மம் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிபுணர்கள் இந்த ஐந்து பேரின் மரணத்திலும் சில ஒற்றுமைகள் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு மறுநாள் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று 60 வயதுடைய Alexander Tyulakov தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாக Leonid Shulman என்பவர் குளியலறையிலிருந்து கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். மேலும், மாஸ்கோவில் இருக்கும் Vladislav Avayev, தன் குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அதனை தொடர்ந்து சில நாட்களில் Sergey Protosenya என்ற நபர் ஸ்பெயினில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதில் 4 பேர் எரிவாயு துறையில் இருந்துள்ளனர். உக்ரைன் பிரச்சினையில் ரஷ்யா கடும் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவர்கள் அதிபர் விளாடிமிர் புடின் குறித்த உண்மையை வெளியில் தெரியப்படுத்தலாம் என்ற பயத்தில் அவர்களை புடின் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் அதிபர் விளாடிமிர் புடின் தனக்கு எதிராக மாற வாய்ப்பிருக்கும் நெருக்கமான கோடீஸ்வரர்களை கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.