வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் முனியன்-செல்வி தம்பதியினர் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டில் முயல்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இவர்களது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர் . இந்த விபத்தில் வீட்டில் அடைத்து வைத்திருந்த 27 முயல் குட்டிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.