Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு நீதி வழங்க வேண்டும்” மருத்துவ கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!!!

 மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரியாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் மட்டும் அரசு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு  13 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 4 லட்ச ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எனவே அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து 2-ஆம்  ஆண்டு மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தவிர அனைத்து மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை விடுவதாகவும், உடனே மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் இருந்து காலி செய்ய வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால்  மாணவர்கள் விடுதியை காலி செய்யாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கார்  ஷெட்டில்   கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ‌ காலை முதல் மாணவர்களுக்கு விடுதியில்  வழங்கப்பட்ட உணவும் நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் தங்களுடைய சொந்த செலவில் உணவு வாங்கி சாப்பிட்டனர். மேலும் தங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும்  என மாணவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |