ரஷ்யா பகுதிகளை குறிவைத்து உக்ரேனிய ரணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளும் தாக்குதல்களை தீவிரப் படுத்தி வருகின்றனர். இதனை அடுத்த உக்ரேன் மீது ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லைப்பகுதியான லூஹான்ஸ்கியை குறிவைத்து உக்ரேனிய ராணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் போன்ற இடங்களில் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களை உக்ரைன் ராணுவத்தினர் முறியடித்துள்ளனர். மேலும் ரஷ்யா ராணுவ வாகனங்களை தகர்த்தெரிந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.