சவுதியில் அசுத்தமான உணவகத்தை கண்டுபிடித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
சவுதி அரேபியா நாட்டில் ஜெட்டா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 30 ஆண்டுகளாக உணவகம் ஒன்று இயங்கி கொண்டிருந்தது. இந்த உணவகத்தில் நகராட்சி அதிகாரிகள் உங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த உணவகத்தின் குளியலறையில் 30 ஆண்டுகளாக சம்சா போன்ற பிற உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து மதிய உணவு போன்ற மற்ற உணவுகளும் அதே குளியலறையில் தயாரிக்கப்பட்டு கொண்டிருந்தது. மேலும் இந்த உணவகத்தில் காலாவதியான இறைச்சிகள் மற்றும் பாலாடை கட்டிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவைகளில் சில பொருள்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியாகிவிட்ட நிலையிலும் உணவில் பூச்சிகளும் எலிகளும் ஓடி விளையாடிக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து 30 வயதான உணவக ஊழியர்களிடம் சுகாதார அட்டை எதுவும் இல்லை. இதேபோன்று சவுதி அரேபியாவில் அசுத்தமான உணவகம் மூடப்படுவது இது முதல் முறையல்ல. இந்த ஜனவரி மாதம் ஜெட்டாவில் உள்ள ஷவர்மா என்ற உணவகத்தில் எலி ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த உணவகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்த மக்கள் பலரும் சமூகவலைதளத்தில் ஆத்திரம் அடைந்தனர். இந்த வீடியோவை பார்த்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டனர். இதற்கு பதிலளித்த சவுதி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் 2833 ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வந்ததாக தெரிவித்தனர். மேலும் 43 முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.