Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை விதித்த நீதிபதி….!!

சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருக்கம்பாளையம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி ராஜேஷ் அவருடன் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவினாசி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி சுகந்தி இந்த வழக்கில் குழந்தை திருமணம் செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜேஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |