Categories
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புத் திட்டம்…. தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

ஏழை, எளிய மக்களுக்காக மாநகராட்சி ஆணையர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்துள்ள நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க  ஸ்டாலின் சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது நகர்ப்புறத்தில் இருக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் சென்னை மாநகராட்சியில் உள்ள 2 மண்டலங்கள், மற்றவைகளில் 1 மண்டலம், 7 நகராட்சிகள், 37 மாவட்டங்களில் தலா 1 பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி தண்டையார்பேட்டை பகுதியில் 3,032 மனித சக்தி வேலை நாட்களும், தி.ரு.விக. நகர் பகுதியில் 6,167 மனித சக்தி வேலை நாட்கள் என 5,098 வேலை நாட்களை பயன்படுத்தி வண்டல்கள் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளது. மேலும் தண்டையார்பேட்டை மற்றும் தி.ரு.வி.க நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் ஆதார் அட்டையுடன் சென்று வேலைவாய்ப்புக்கான அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |