சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அருகே இருக்கும் கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகின்றாள். அதே பகுதியில் வசித்துவரும் மார்பின்சிரில் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனிடையே அதே பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுவனும் அந்த மாணவியை சென்ற ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகின்றது.
இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சைல்டு ஹெல்ப் லைனுக்கு ரகசியமாக தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் போலீசாருடன் அங்கு வந்து விசாரணை நடத்தி மாணவியை மீட்டு திருவண்ணாமலையில் இருக்கும் வரவேற்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இதுகுறித்து திருவண்ணாமலையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மேலும் போலீசார் விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனையும் மார்பின்சிரில் என்பவரையும் கைது செய்தார்கள்.