ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ள ஆகாசா ஏர் விமான சேவை எப்போது தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்பவர் பிரபல பங்கு சந்தை முதலீட்டாளர். இவர் ஆகாசா ஏர் என்ற விமானப் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஆதித்யா கோஷ், வினய் தூபே ஆகியோர் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக வினய் தூபே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆகாசா ஏர் விமான போக்குவரத்து வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் கடந்த ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு ஆகாசா ஏர் விமானத்திற்கு மத்திய அரசு தடையில்லா சான்று வழங்கியது. மேலும், 72 விமானங்களை வாங்குவதற்கு போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆகாசா ஏர் விமானம் முன்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தற்போது ஜூலை மாதம் ஆகாசா ஏர் விமானம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஜூலை முதல் விமான சேவை தொடங்கும் எனவும், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆகாசா ஏர் விமானம் 18 விமானங்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் வினய் துபே தெரிவித்துள்ளார்.