ஹூண்டாய் நிறுவனம் வாடிக்கையாளருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு சைலேந்தர் பட்நாயக்கர் என்ற வாடிக்கையாளர் வாக்கில் ஹூண்டாய் கிரெட்டா 1.6 VTVT SX+ வேரியண்ட் என்ற காரை வாங்கியிருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு கிரெட்டா மாடல் கார் டெல்லி, பாணிபட் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்தது. இந்த காரை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தின் போது காரில் வைத்திருந்த ஏர்பேக் வேலை செய்யவில்லை.
இதனால் பட் நாயக்கர் ஹூண்டாய் நிறுவனம் மீது டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹூண்டாய் நிறுவனம் பட் நாயக்கருக்கு ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த வழக்கை எதிர்த்து ஹூண்டாய் நிறுவனம் தேசிய நுகர்வோர் கமிஷனில் மேல்முறையீடு செய்தது. இங்கு ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ஹூண்டாய் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் ஹூண்டாய் நிறுவனத்தின் வழக்கை நிராகரித்தது.