ஆராஞ்சி ஏரியை ஆக்கிரமித்து 40 ஏக்கரில் நெல், கரும்பு சாகுபடிசெய்ததை அகற்றும் பணியானது நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் தாலுக்கா ஆராஞ்சி ஊராட்சியில் இருக்கும் ஏரி 97 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியானது ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அந்த ஏரியின் 40 ஏக்கர் பரப்பளவை அங்கு சுற்றி இருக்கும் மக்கள் ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி செய்து வந்தார்கள்.
இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் கீழ்பெண்ணாத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மஹாலக்ஷ்மி, ஆராய்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் விஜயாசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளானது நடைபெற்றது. அதன் விளைவாக 40 ஏக்கரில் நெல், கரும்பு உள்ளிட்டவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினார்கள்.