நம் எல்லோருக்குமே ரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றி நன்றாகவே தெரியும். இந்த கார் சிறப்பம்சங்களுடன் இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் காரை மிஷின் வைத்து செய்யாமல், மனிதர்களின் கைகளாலேயே செய்துள்ளனர் என்பது தான் ஆகும். இந்தக் காரின் ஒரு பகுதியில் கோடு போடப்பட்டிருக்கும். அந்த கோடைகூட மிஷின் வைத்து போடாமல் ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனி என்ன செய்கிறார்கள் என்றால் அதற்கென்று தனியாக ஊழியர் வைத்திருக்கிறார்கள்.
அவ்வாறு காரில் கோடு போடுபவரின் பெயர் பெயிண்டர் மார்க் கோர்ட் என்று கூறுகிறார்கள். இந்த வேலையை கிட்டத்தட்ட 2003 வருடத்திலிருந்து இவர் செய்து வருகிறார். இதில் ரோல்ஸ் ராய்ஸ் எவ்வளவு பெரிய கார் கம்பெனி என்று நம் எல்லோருக்குமே தெரியும். அவ்வளவு பெரிய கம்பெனியில் இந்த காருக்கு லைன் போடுவதற்கு இவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.