நடிகை நயன்தாராவை கடுமையாக சாடியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன்.
வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்ப்பட செய். இத்திரைப்படத்தில் ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும் மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். எஸ்ஆர் ஹர்ஷித் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை கூறினார். மேலும் அவர் பேசியதாவது, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் படத்தின் வெற்றியில் மட்டுமே பங்கேட்கின்றார்கள்.
ஆனால் தோல்வியில் பங்கேற்பதில்லை. தயாரிப்பாளர்கள் பற்றி கவலைப்படுவது இல்லை. தெலுங்கு நடிகர்களான பிரபாஸ் ராம்சரண் படம் தோல்வியடைந்தால் தனது சம்பளத்தில் பாதியை தயாரிப்பாளர்களிடம் திருப்பி கொடுத்து விடுகிறார்கள். அதுதான் மனித நேயம் என புகழ்ந்து அவர்களை பாராட்டியுள்ளார். தமிழ் நடிகர்கள் அப்படி இல்லை என கண்டனம் தெரிவித்தார். புரமோஷன் நிகழ்ச்சிக்கு வராத நடிகைகளையும் சாடினார்.
தான் ப்ரமோஷன்களுக்கு வந்து படம் நன்றாக இருக்கும் என்று கூறி பின்னர் படம் நன்றாக போகாவிட்டால் தனக்கு கெட்ட பெயர் ஆகிவிடும் என்பதால்தான் தான் பங்கேற்பதில்லை என நயன்தாரா கூறியதை சொல்வதைப் போல சாடினார். மேலும் அதற்காக 6 கோடி வாங்குகிறாயா என சாடினார். படம் நல்லா இருக்காது என எண்ணினால் நீங்கள் தான் நல்லா இல்லாமல் போவீர்கள். நடிகர், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பதால்தான் படத்திற்கு செலவு செய்ய முடிவதில்லை. என்னை பொறுத்தவரை தமிழ் சினிமா வாழ வேண்டும். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட கோபம் இல்லை” என பேசியுள்ளார்.