கொரோனா காரணமாக முன்னணி IT நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு தங்களது ஊழியர்களை அழைக்க தயக்கம் காட்டி வருகிறது. இருப்பினும் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியாவின் முதன்மை தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சுமார் 50,000 ஊழியர்களை இந்த மாதம் முதல் அலுவலகத்திற்கு அழைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஒரு வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே அலுவலக வேலை நாள் என்றும், உயர்மட்ட ஊழியர்கள் மட்டுமே தற்போது அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள இரண்டு நாட்கள் இந்த ஊழியர்கள் வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலை செய்யலாம். அதேபோல் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட டிசிஎஸ் நிறுவனம் மூத்த நிலையில் உள்ள ஊழியர்களை இந்த மாதம் முதல் அலுவலகத்திற்கு அழைக்க போவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் வாரத்தில் மூன்று நாட்கள் சுமார் 50,000 ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து பணிபுரிய அழைக்கப்படுவார்கள். படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ & எம்டி ராஜேஷ் கோபிநாதன் கூறியுள்ளார்.