Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு அபராத தொகையா?…. காவல் துறையினரின் புதிய முயற்சி…. வெளியான தகவல் ….!!!!

போக்குவரத்து காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்து விதிமீறல் அபராத விதிப்பு பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. மேலும் ஆரம்ப காலகட்டத்தில் அபராதம் செலுத்துவது நன்றாக இருந்தபோதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள்  அபராதம் செலுத்தாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி சென்னையில்   அபராதம் செலுத்தாதவர்களை  தொலைபேசி மூலம் எச்சரிப்பதற்காக 10 அழைப்பு மையங்களை கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

கடந்த 11-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையில் மட்டும் 2,389 அழைப்புகள் செய்து சாலை விதிகளை மீறுபவர்களுக்கு நிலுவையிலுள்ள விதிமீறல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராத தொகை ஒரு வார காலத்திற்குள் செலுத்தாவிட்டால் வழக்குகள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 11 நாட்களில் 55,885 வழக்குகளின் மூலம் 1 கோடியே 41  லட்சத்து 43 ஆயிரத்து 545 ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Categories

Tech |