Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசி கொண்டிருந்த பெண்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடசித்தூர் இந்திரா நகரில் ஜோதி ராஜ் என்பவர் வசித்துவருகிறார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிராஜ் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஆர்த்தி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |