Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொடுமைப்படுத்திய மாமியார்…. மருமகளின் கொடூர செயல்…. செங்கல்பட்டில் பரபரப்பு…!!

கொடுமை செய்த மாமியாரை மருமகள் உறவினர்களை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜாரில் அடகு கடை நடத்தி வரும் பத்தேசந்த் என்பவருக்கு பிரேமா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் முதல் 2 மகன்கள் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது மகன்கள் தந்தையுடன் அடகு கடையில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் மூன்றாவது மகன் பிண்டு குமார் (44) என்பவருக்கு பீகாரை சேர்ந்த சுஜாதா (27) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதனையடுத்து மாமியார் பிரேமா சுஜாதாவை தரக்குறைவாக பேசியும், சாப்பாடு கொடுக்காமலும்  கொடுமைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு பிரேமா வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிரேமாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே சுஜாதா திடீரென மாயமான நிலையில் போலீசார் சுஜாதாவை தேடி கண்டுபிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. அதில் மாமியார் பிரேமா மிகவும் கொடுமை செய்ததால் ஆத்திரமடைந்த சுஜாதா பீகாரில் இருந்த தனது உறவினர்களான சுமித் மற்றும் தீபன் ஆகியோரை வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து இரவில் சுஜாதா தனது குழந்தைகளை மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு வீட்டில் தனியாக இருந்த பிரேமாவை கத்தியால் கழுத்தை அறுத்து சரமாரியாக தாக்கிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலிசார் பிரேமாவை கைது செய்த நிலையில் தப்பியோடிய சுமித் மற்றும் தீபன் ஆகியோரை 5 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |