தந்தை-மகன் இருவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஐஸ் அவுஸ் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபருடன் சிறுமி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சந்தோஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதற்கு சந்தோஷின் தந்தை சம்பத் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் தந்தை மகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.