Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகளுக்கு மாதம் மாதம் வருமானம்….. ரூபாய் 10,000 கிடைக்கும்”….. முதல்வரின் சூப்பர் அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு மாதம் 900 ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு என நிலையான வருமானம் வழங்கும் வகையில் அவர்களுக்காக மாதம் 900 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். இந்த பணத்தை பெறுவதற்கு ஒரு கண்டிஷனும் உள்ளது. இது போக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த திட்டத்தில் விவசாயிகள் மாதம் 900 ரூபாய் பெற வேண்டுமென்றால் அவர்கள் நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு நாட்டுப் பசுமாடு அவசியம் என்பதால் ஒரு நாட்டுப் பசுமாடு அவர்கள் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அந்த கண்டிஷன்.

இந்த திட்டம் தொடர்பாக நிதி ஆயோக் நடத்திய நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்று பேசினார். அப்போது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகத்தான் விவசாயிகளுக்கு மாதம் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்ததாக கூறினார். நாட்டு பசு மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மாதம் 900 ரூபாய் எனில் ஆண்டிற்கு 10 ஆயிரத்து 800 ரூபாய் கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

Categories

Tech |