Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“துணி வியாபாரியை கொலை செய்த 5 பேர்”… பாய்ந்தது குண்டாஸ்…!!!!

வியாபாரியை கொலை செய்த 5 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பட்டேல் அப்துல் ரசாக் தெருவில் வாழ்ந்து வந்தவர் முகமத் என்ற துணி வியாபாரி. இவர் சென்ற மார்ச் 4ம் தேதி நல்லவன்பாளையத்தில் அவரின் நண்பர்களுடன் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த திருவண்ணாமலையில் உள்ள தென்னை மர தெருவைச் சேர்ந்த சையது முகமது தரப்பினருக்கும் முகம்மத் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு பின் முகமத் மற்றும் அவருடைய நண்பர்கள் வீட்டிற்கு சென்றிருக்கின்றார்கள்.

முகமத் அண்ணா நகர் 1வது தெரு வழியாக அவரின் வீட்டிற்கு வரும்பொழுது சையது முகமத், அவருடைய தாய் சாமா, விக்னேஷ், மோசஸ், மிதுலன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு முகம்மதின் முதுகில் இரும்பு ராடால் தாக்கி பின் கத்தியால் குத்தி உள்ளார்கள். இதனால் படுகாயம் அடைந்த முகமத் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் போலீசார் தாக்கிய 5 பேரையும் கைது செய்தார்கள். மேலும் இவர்கள் குற்றச் செயலில் ஈடுபடாமல் இருக்க குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பொலிஸ் தரப்பினர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்கள். இதைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்கள்.

Categories

Tech |