Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு ஷாக் நியூஸ்….வெளியான கிடுக்கிப்பிடி உத்தரவு….!!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு புதிய உத்தரவினை  பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே உள்ள திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ, தனக்கு வழங்கப்பட்ட இடம் மாறுதலை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த வழக்கு இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியான எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த  வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து பள்ளிக் கல்வித்துறையில் குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவு அதிகாரிகளின் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்க்க வேண்டும் எனவும் அதில் மாறுதல் இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகள் பற்றி விசாரிக்க,போதுமான அளவில் போலீசாரை ஒதுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |