Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற டாக்டரின் தம்பி”…. பரிதாபமாக உயிரிழப்பு…!!!!

ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மருந்தாளர் தற்கொலைக்கு முயற்சித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் வாழ்ந்து வந்தவர் பாஸ்கர். இவர் ஆரணியில் உள்ள புது மசூதி தெருவில் இருக்கும் இவருடைய அண்ணன் நக்கீரன் ஆஸ்பத்திரியில் மருந்து கடை நடத்தி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து கடையை விட்டு விட்டு அதே ஆஸ்பத்திரியில் இருக்கும் மருந்துக்கடையில் மருந்தாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கரின் அண்ணன் டாக்டர் நக்கீரன் வீட்டுக்குச் சென்றதும் பாஸ்கர் உள்பக்கமாக மருந்து கடையை பூட்டிவிட்டு அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கின்றார். அப்போது கதவு எட்டி உதைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை உயிருடன் மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Categories

Tech |