குளிர்காலம் முடிந்ததும் பசுக்களை மேய்ச்சலுக்காக திறந்து விடும் நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
சுவீடன் நாட்டில் ஹாலந்து என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் குளிர்காலத்தில் தொழுவத்தில் அடைக்கப்பட்டுள்ள பசுக்களை குளிர் காலம் முடிந்தபின் மேய்ச்சலுக்காக புல்வெளி பகுதிக்கு திறந்துவிடும் நிகழ்வு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி சுவீடன் நாட்டின் பால்வளத் துறை சார்பில் நடைபெற்ற பசுக்களை மேய்ச்சலுக்காக புல்வெளி பகுதிக்கு திறந்துவிடும் மகிழ்ச்சிகளை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும் நெடுநாட்களுக்கு பிறகு வெளியே வந்த பசுக்கள் துள்ளி குதித்தோம் பாய்ந்தோடி விளையாடியுள்ளன.