Categories
உலக செய்திகள்

இனிமேல் இது இருந்து பயனில்லை…. அகற்றப்பட்ட நட்பின் நினைவுச்சின்னம்…. அதிரடி காட்டிய உக்ரைன்….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான நட்பை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னமானது நேற்று அகற்றப்பட்டது. 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக நீடித்து வருகிறது. முன்னதாக சோவியத் யூனியனின் 60-வது ஆண்டு விழாவை நினைவுபடுத்தும் வகையில் கடந்த 1982ஆம் ஆண்டில்  உக்ரைன் தலைநகரான கீவ்வில்  People’s Friendship Arch என்று கூறப்படும் வானவில் வடிவிலான நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அருகிலேயே சுமார் 27 அடி உயரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்ய தொழிலாளி ஒரே பீடத்தில் ஒன்றாக இணைந்து இருப்பது போன்ற சிலையும்  நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நட்பை தெரிவிக்கும் வகையில்  அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவு சின்னமானது நேற்று அகற்றப்பட்டது. இதுகுறித்து கீவ் நகரின் மேயர் தெரிவித்ததாவது “உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த நினைவுச்சின்னமானது அகற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |