Categories
மாநில செய்திகள்

புறப்பட்ட ரயில்… பாய்ந்த பெண் காவலர்…. ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி நோக்கி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ரயில் புறப்படும் நேரம் என்பதால் பயணிகள் அவசரம் அவசரமாக ரயில் நிலையத்துக்குள் ஓடி, வந்து கொண்டிருந்தனர். மேலும் பலர் அடித்து பிடித்து ரயிலில் ஏறிக்கொண்டு இருந்த போது, அந்த பிளாட்பாரத்தில் ரயில்வே பெண் போலீஸ் மாதுரி என்பவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதையடுத்து சரியாக  இரவு 11.30 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது.

அப்போது ரயிலில் இருந்த ஆண் பயணி ஒருவர் திடீரென தவறி பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையே விழுந்தார். உடேனே இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் மாதுரி ஓடி சென்று அந்த பயணியின் கையை பிடித்து இழுத்து நடைமேடைக்கு கொண்டு வந்துள்ளார். இதன் பிறகு, இயல்பு நிலைக்கு திரும்பிய அந்த பயணி தனது உயிரை காப்பாற்றிய பெண் காவலர் மாதுரிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனால் அங்கிருந்த ரயில் பயணிகளும் காவலர் மாதுரியை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Commendable lifesaving act by lady RPF constable at Chennai Egmore Ms. A. Mathuri, the on-duty RPF constable at Chennai Egmore swiftly reacted on noticing a passenger falling from moving train and pulled him back to safety Safety matters! Never board/alight from speeding train
இதனை தொடர்ந்து இந்த விசாரணையில், ஏ.சி பெட்டியில் தவறுதலாக ஏறிய அந்த ஆண் பயணி, பொது பெட்டிக்கு மாறுவதற்கு முயன்றபோது, இவ்வாறு நடந்தது தெரிய வந்தது. இந்நிலையில் ஆண் பயணியின் உயிரை காப்பாற்றிய தகவல் அறிந்த  ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள்,ரயில்வே காவலர் மாதுரிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் இச்சம்பவத்திற்கு ரயில்வே போலீசார் மட்டும் அல்லாமல் பெண் காவலருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை  தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த  வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |