வருமான வரியை சேமிக்க உதவும் 4வது சேமிப்பு திட்டங்கள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம் உங்கள் வரியை சேமித்து, பணத்தை நல்ல முதலீடுகளில் போடமுடியும். இதனை வெறும் சேமிப்பாக மட்டுமல்லாமல் நீண்ட கால அடிப்படையில் சேமித்து வைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம்தான் வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சரியான நேரம். எனவே தற்போது ஏப்ரல் மாதம் என்பதால் சில முக்கிய வரி சேமிப்பு திட்டங்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்:
பெண் குழந்தைகளின் நலன் மற்றும் எதிர்காலத்திற்காக அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்திற்கு தற்போது 7.6 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வரி சலுகை கிடைக்கிறது.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்:
இந்த திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டம். தற்போது இதற்கு 7.1 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. இதில் முதலீடு செய்யும் தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கின்றது.
ஈக்விட்டி சேமிப்பு திட்டம்:
இந்த திட்டம் பிரபலமான வரி சேமிப்பு திட்டம் ஆகும். இவை வரியை சேமிப்பது மட்டுமல்லாமல் நல்ல வருமானத்தை தருகிறது.
தேசிய பென்ஷன் திட்டம் :
தேசிய பென்ஷன் திட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வரி சலுகை கிடைக்கின்றது.