நீங்கள் விமானத்தில் bussiness class அல்லது economy இந்த இரண்டில் எதில் பயணம் செய்தாலும் அதிலுள்ள பயணிகளுக்கு பாராசூட் வழங்கப்படுவதில்லை. இப்படியிருக்கையில் விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென கோளாறு ஏற்பட்டால் எப்படி அதிலிருக்கும் பயணிகளின் உயிரை காப்பாற்றுவது என்று யோசித்திருக்கிறீர்களா..?
பயணிகளுக்கு பாராசூட் கொடுக்கவில்லை என்றாலும் அவர்கள் அனைவரையும் காப்பாற்ற முடியும் அது எப்படி என்று கேட்டால், உக்ரைனை சேர்ந்த tatamika vladimir என்கிற ஒரு பொறியாளர் கண்டுபிடித்த ஒருவிதமான விமான வடிவமைப்பு மூலமாக பேராஷூட் இல்லாமலேயே பயணிகளை காப்பாற்ற முடியும். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பயணிகள் அமர்ந்திருக்கும் கேபினட் பகுதியை மட்டும் தனியாக கழட்டி விட்டால் போதும். அந்த கேபினட்டில் பாராசூட் இருக்கும் அதன் மூலம் விமானத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களின் உயிரையும் காப்பாற்ற முடியும்.