தாமஸ் பஸ்வி என்பவர் சாதாரணமாக ஒரு chair-ஐ வைத்துக் கொண்டிருந்தார். இந்த உலகத்திலேயே அவருக்கு மிகவும் பிடித்தது அந்த chair தான். அதனால் அந்த chair-ல் வேறு யாரைப் அமர்ந்தாலும் அவருக்கு பிடிக்காமல் மிகவும் கோபப்படுவார். ஒரு நாள் அவருடைய மாமனார் அந்த chair-ல் அமர்ந்து இருப்பார். அதனை கண்டு தாமஸ் பஸ்வி மிகவும் கோபப்பட்டு பயங்கரமாக திட்டி வெளியே அனுப்பிவிடுகிறார். அதன்பின் ஏதோ சில காரணங்களினால் தாமஸ் பஸ்வி தன்னுடைய மாமனாரை கொலையும் செய்கிறார்.
இவர் செய்த தவறுக்கு காவல்துறை தாமஸ் பஸ்வியை கைது செய்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தாமஸ் பஸ்வியை கோர்ட்டில் ஆஜர்படுத்திகின்றனர். அங்கு அவருக்கு மரண தண்டனை கிடைக்கிறது. இதனையடுத்து தாமஸ் பஸ்வியை தூக்கில் போடுவதற்கு முன்னால் அவரிடம் கடைசி ஆசையை கேட்டுள்ளனர். அதற்கு தாமஸ் பஸ்வி தன்னுடைய chair-ல் கடைசியாக ஒரு முறை அமர வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு காவல்துறை அதிகாரிகளும் தாமஸ் பஸ்வியை அழைத்துச் சென்று அவருடைய chair-ல் அமர வைக்கின்றனர்.
சிறிது நேரம் கழித்து அந்த chair-ஐ விட்டு அவர் எழுந்துள்ளார். அதன்பின் அவர் அந்த chair-ஐ பார்த்து கூறியதாவது “என்னோட chair-ல் யார் அமர்ந்தாலும் அவர்கள் இறந்து விடுவார்கள்” என்று சாபம் கொடுத்திருக்கிறார். இன்று வரையிலும் அந்த chair-ல் அமர்ந்த யாரும் உயிரோடு இல்லை என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். கிட்டத்தட்ட 80 பேர் இந்த chair-ல் அமர்ந்து தன் உயிரை விட்டுள்ளனர். இதனால் இந்த chair-ல் யாரும் அமரக் கூடாது என்பதற்காக அதனை அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்று மேலே கட்டி விடுகின்றனர்.