ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி என்ற இடத்தில் 2000 – 2001 ஆம் ஆண்டு வரை பஞ்சம் நிலவியது. இதனால் நிலங்கள் எல்லாம் வரண்டு போய் மக்கள் அனைவரும் சாப்பாட்டிற்காக ஒருவரை ஒருவர் கொள்ளையடிக்க தொடங்கிவிட்டார்கள். மேலும் நிறைய பேர் பசியில் இறந்தும் விட்டார்கள். அந்த நேரத்தில் ஒரு 14 வயது சிறுவன் செய்த வேலை அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. அந்த சிறுவனின் பெயர் WILLIAM KAMKWAMBA. இந்த சிறுவன் பள்ளியில் கட்டணம் செல்தாததால் அங்கிருந்து வெளியே விரட்டிவிடுகிறார்கள்.
அந்த சிறுவனுக்கு பள்ளிக்கூடம் போகாமல் இருக்கும் போதுதான் திடீரென காற்றாடி பற்றி படித்தது நினைவிற்கு வந்துள்ளது. அதன்பின் அந்த சிறுவன் காற்றாடி என்றால் என்ன? என்பது குறித்து நூலகத்திற்கு சென்று ஆய்வு செய்து அதனை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டான். இதனையடுத்து அந்தச் சிறுவன் தனக்கு கிடைத்த நீளமான கம்புகள், சைக்கிள் டயர்களை கொண்டு ஒரு காற்றாடியை உருவாக்கி இருக்கிறான். பின்னர் காற்றாடியின் உயரத்தை பயன்படுத்தி கிணறுகளிலிருந்து ஊற்றுகளிலிருந்தும் தண்ணீரை வெளியே எடுக்க தொடங்கியுள்ளான்.
மக்களுக்கு தண்ணீர் கிடைக்க தொடங்கியதால் பஞ்சமும் கொஞ்சம் கொஞ்சமாக தீர தொடங்கியது. அதன்பின் அந்த சிறுவனைப் பற்றி கேள்விப்பட்ட சிலர் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று படிக்க வைத்தார்கள். அச்சிறுவனை பற்றிய புகழ் உலகமெங்கும் பரவியதால் அனைவரும் வில்லியமிற்கு ஆதரவு கொடுத்தார்கள். இன்னைக்கு 20 வருடம் கழித்து வில்லியம் தனது வறண்டுபோன ஊரை பச்சைப் பசேல் என்று மாற்றியுள்ளார். இன்று இவர் ஆப்பிரிக்காவில் உள்ள தனது ஊரில் சுமார் 200க்கும் அதிகமான காற்றாடிகளை வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரால் கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தில் 1000 பிள்ளைகள் இலவசமாக படித்து வருகின்றனர்.