Categories
தேசிய செய்திகள்

“பி.எம்.கிசான் திட்டம்”… 11-வது தவணைத் தொகையை பெறணுமா?…. இதை உடனே பண்ணுங்க…..!!!!!

இந்தியாவில் வேளாண் தொழில் முதன்மை தொழிலாக விளங்குகிறது. இதற்கிடையில் பெரும்பாலானோர் வேளாண் தொழிலை நம்பி இருக்கின்றனர். வேளாண் தொழிலையும் விவசாயிகளையும் காக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஒத்து நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. சென்ற 2020 ஆம் வருடம் மத்திய அரசு 3 வேளாண் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு திட்டங்களை தொடர்ந்து விவசாயிகள் வேளாண் இடுப்பொருட்களை வாங்கும் பொருட்டு கிசான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ் தகுதிபெற்ற விவசாயிகளுக்கு உதவித்தொகையானது வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு ரூபாய் 2 ஆயிரம் வீதம் வருடந்தோறும் 3 கட்டங்களாக ரூபாய் 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் பயனடைய முடியும். தவணையை பெற தகுதி உள்ள விவசாயிகள் தங்களது கேஒய்சி விபரங்களை புதுப்பிப்பது அவசியமான ஒன்றாகும். இப்போது விவசாயிகள் eKYC செயல்முறைகளை முடிக்க வேண்டியது அவசியம் ஆகும். இதை முடித்தால் மட்டுமே தவணைத்தொகை சரியாக வங்கிகணக்கில் செலுத்த முடியும். இதுவரையிலும் பிஎம் கிசான் திட்டத்தில் 10 தவணைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் 11-வது தவணை தொகை வரவுக்காக விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இ-கேஒய்சி செயல்முறை

# முதலாவதாக pmkisan.gov.in எனும் இணையதள  பக்கத்திற்கு செல்ல வேண்டும். அவற்றில் இ-கேஒய்சி என்பதனை கிளிக் செய்து உள்நுழையவும்.

# உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP send செய்யவும்.

# தற்போது உங்களின் மொபைலுக்கு வரக்கூடிய 4 இலக்க OTP எண்ணை பதிவிட வேண்டும்.

# பின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல்எண்ணில் மற்றொரு 6 இலக்க OTP வரும். அதனை  நிரப்பி சமர்ப்பி என்பதனைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக உங்களின் இ-கேஒய்சி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியைப் பெறுவீர்கள்.

Categories

Tech |