சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி பிரேமலதா என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீதுள்ள வழக்குகள் பற்றி வேட்புமனுவில் உதயநிதி தவறான தகவல் தந்ததாக வாக்காளர் பிரேமலதா மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி வெற்றிக்கு எதிரான மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம். உதயநிதி மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம் வாக்காளர் பிரேமலதாவின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.