Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“50-க்கும் மேற்பட்ட கிராமங்கள்” திடீரென உருவான அருவிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!!

தொடர் மழையின் காரணமாக திடீர் அருவிகள் உருவாகியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள தேவதை அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி போன்ற போன்றவைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் போளூர், பேத்துப்பாறை, பெருமாள்மலை, புலிச்சோலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறு சிறு அருவிகள் உருவாகியுள்ளது. இந்த பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக அருவிகள் உருவாகியுள்ளது. இந்த அருவிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியின் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

இங்கு ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை குளுமையான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். ஆனால் தற்போது மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டுமானால், அவர்களுக்கு வேண்டிய குடிநீர் கழிப்பறை வசதிகள் வாகனம் நிறுத்துமிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Categories

Tech |