Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அந்த செயலியை பதிவிறக்குங்க…. “நம்பி ஏமாந்து போன மளிகைக்கடைக்காரர்”…. ரூ1¼ லட்சத்தை மீட்டுக்கொடுத்த சைபர் கிரைம் போலீஸ்.!!

பொய்யான வாடிக்கையாளர் சேவை மைய எண் மூலம் மளிகைக் கடைக்காரரிடம் அபேஸ் செய்த பணத்தில் ரூ 1 1/4 லட்சத்தை சைபர்கிரைம் காவல் துறையினர் மீட்டு கொடுத்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் வசித்து வருபவர் பாபு(40). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருடைய கடைக்கு ஒரு வணிக வளாகத்தில் இருந்து பொருட்களை வாங்கி பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வந்துள்ளார். அப்போது திடீரென்று தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அதில் பேசிய நபர் ஒருவர் அவருடைய செல்போனில் ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய பாபு தனது செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்தார். அதன் பின் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ 2,08,740 காணாமல் போனது. இதையடுத்து பொய்யான வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு செயலியை பதிவிறக்கம் செய்ததால் பணம் அபேஸ்  செய்யப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு ஆன்லைன் மூலம் தர்மபுரி காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின்பேரில் அந்த பணத்தை மீட்பதற்கு தொழிநுட்ப நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்து வந்தனர். இதனையடுத்து 1, 33,923- த்தை மீட்டு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பாபாவிடம் ஒப்படைத்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, யாராவது செயலிகளை பதிவிறக்கம் செய்ய சொன்னால் அதை இன்ஸ்டால் செய்யாதீர்கள். வங்கி கணக்கு எண், ஏ.டி.எம் எண் உட்பட பல விவரங்களை செல்போன் மூலம் யாரும் கேட்டால் பகிர வேண்டாம். மேலும் செல்போனில் சந்தேகப்படும்படி எந்த அழைப்புகள் வந்தாலும் உடனே சைபர்கிரைம் காவல்துறையினர் தொடர்புகொண்டு புகார் அளியுங்கள் என்று தெரிவித்தார்.

Categories

Tech |