அமெரிக்கா சென்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கிருக்கும் பெண் தலைமை செயல் அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில் நேற்று சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பெண் தலைமை நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காக எவ்வாறு பங்களிப்பு தரலாம் என்பது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்.
இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செய்து வரும் திட்டங்களை நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு விளக்கியிருக்கிறார். கிராமப்புற பெண்களுக்கு நேரடி முறையில் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது, மகளிர் சுய உதவி குழு, பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் வழங்குவதற்கான முத்ரா போன்ற திட்டங்கள் பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார்.