Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. பள்ளிகளுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் மாணவர்களுக்கு விரைந்து தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகள் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 4ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 21-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |