Categories
உலக செய்திகள்

போரை நிறுத்துங்கள்…. உருக வைத்த 3 வயது குழந்தையின் பாடல்… உறைந்துபோன உக்ரைன் மக்கள்…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 வயது சிறுவன் போரை எதிர்த்து பாடல் பாடியது லட்சக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. எனவே, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி, பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் சில மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கி ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த போரில் இரு நாடுகளுமே தங்களால் முடிந்த அளவிற்கு எதிர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கிவ் நகரத்தில் ஒரு தொண்டு நிறுவனமானது நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தது. இதில் லியோனார்ட் புஷ் என்ற 3 வயது சிறுவன், ஒகியான் எல்ஜி என்னும் இசை குழுவினரோடு இணைந்து நாட்டில் நடக்கும் போரை எதிர்த்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

சிறுவன் பாடிய பாடலை கிவ் நகரத்தின் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருக்கும் திரையில் நேரடியாக ஒளிபரப்பினர். அதனைக் கேட்டவுடன் பார்வையாளர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.  அனைத்து மக்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. சிறுவனின் குரலில் மெய்மறந்து நின்றனர். அச்சிறுவனின் குடும்பம் சொந்த நகரத்தில் தாக்குதல் நடப்பதால் மேற்கு பகுதிக்கு புலம்பெயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |