Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு” இனி இப்படித்தான் ஹேர் ஸ்டைல் வைக்கணும்…. வெளியான அறிவிப்பு….!!!!!

பள்ளியின் ஒழுக்கத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின்  தலைமை ஆசிரியர்  சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் முடிவெட்டும் போது தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் போன்ற முறைகளில் முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும், மாணவர்கள் பள்ளி விதிமுறைகளுக்கு உட்பட்டு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அதேபோல் நேற்று திருவூர்  அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி வளாகத்திலேயே  ஆடம்பரமாக  முடி திருத்தங்கள் செய்யக்கூடாது என கூறி  முடித்திருத்தம் (மிலிட்டரி கட்டிங்) செய்யப்பட்டது. இதில்  பள்ளி  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |